பைக்கில் சென்ற தம்பதி லாரி மோதி பலி

Added : பிப் 24, 2021
Share
Advertisement
காரைக்கால் : காரைக்காலில் லாரி மோதி பைக்கில் சென்ற கணவன், மனைவி இறந்தனர். புதுச்சேரி மாநிலம், காரைக்கால் திருப்பட்டினம் சுவாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த சிவபெருமாள், 35; மீன்பிடித் தொழில் செய்கிறார். இவரது மனைவி வீரலட்சுமி, 33. இருவரும் நேற்று மதியம் 1 மணிக்கு பொருட்கள் வாங்கிக் கொண்டு பைக்கில் வீடு திரும்பினர்.நிரவி இரண்டாவது சாலை அருகில் பின்னால் வந்த டேங்கர்

காரைக்கால் : காரைக்காலில் லாரி மோதி பைக்கில் சென்ற கணவன், மனைவி இறந்தனர்.

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் திருப்பட்டினம் சுவாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த சிவபெருமாள், 35; மீன்பிடித் தொழில் செய்கிறார். இவரது மனைவி வீரலட்சுமி, 33. இருவரும் நேற்று மதியம் 1 மணிக்கு பொருட்கள் வாங்கிக் கொண்டு பைக்கில் வீடு திரும்பினர்.நிரவி இரண்டாவது சாலை அருகில் பின்னால் வந்த டேங்கர் லாரி, பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த வீரலட்சுமி சம்பவ இடத்திலேயே இறந்தார். காயமடைந்த சிவபெருமாள் அரசு பொது மருந்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் லாரியை ஓட்டி வந்த நிரவி பகுதி சுப்ரமணியன், 48; மீது திருப்பட்டினம் போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் மனோகரன் வழக்கு பதிந்து தேடி வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X