சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தம்பதியை தாக்கிய போலீஸ் மீது புகார்

Added : பிப் 24, 2021
Share
Advertisement
சாஸ்திரிநகர் : பெசன்ட் நகர் கடற்கரையில், இளம் தம்பதியை தாக்கிய போக்குவரத்து காவலர் மீது, போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சென்னை, பெசன்ட் நகரைச் சேர்ந்தவர்கள் தமிழரசன், 24, ஜெயலட்சுமி, 20. இருவரும் காதலித்து, ஆறு மாதத்திற்கு முன், திருமணம் செய்து கொண்டனர்.இது, ஜெயலட்சுமியின் குடும்பத்திற்கு பிடிக்கவில்லை என, கூறப்படுகிறது. தம்பதி, பெசன்ட் நகர் கடற்கரையில் பெட்டிக்கடை

சாஸ்திரிநகர் : பெசன்ட் நகர் கடற்கரையில், இளம் தம்பதியை தாக்கிய போக்குவரத்து காவலர் மீது, போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

சென்னை, பெசன்ட் நகரைச் சேர்ந்தவர்கள் தமிழரசன், 24, ஜெயலட்சுமி, 20. இருவரும் காதலித்து, ஆறு மாதத்திற்கு முன், திருமணம் செய்து கொண்டனர்.இது, ஜெயலட்சுமியின் குடும்பத்திற்கு பிடிக்கவில்லை என, கூறப்படுகிறது. தம்பதி, பெசன்ட் நகர் கடற்கரையில் பெட்டிக்கடை நடத்தி வருகின்றனர்.ஜெயலட்சுமியின் உறவினர் நாராயணன், 35; நீலாங்கரை போக்குவரத்து காவலர். இவர், நேற்று முன்தினம் இரவு, பெசன்ட் நகர் கடற்கரைக்கு சென்று, வியாபாரம் செய்து கொண்டிருந்த தம்பதியிடம் தகராறு செய்தார்.ஆத்திரமடைந்த நாராயணன், தமிழரசனை சரமாரியாக தாக்கினார்.

தடுத்த ஜெயலட்சுமியையும் தாக்கி, அவர் உடையை கிழித்துள்ளார்.காயமடைந்த தமிழரசன், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.தமிழரசனின் உறவினர்கள், நாராயணனை கைது செய்யக் கோரி, சாஸ்திரிநகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். நாராயணன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.நேற்றும் விசாரணை நடந்தது. நாராயணன், காவல்துறையில் பணிபுரிவதால், உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று, நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X