அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., வந்தால்... இப்ராஹிம் எச்சரிக்கை

Updated : பிப் 24, 2021 | Added : பிப் 24, 2021 | கருத்துகள் (67)
Share
Advertisement
வேலுார் : ''குடும்ப ஆட்சி மீண்டும் வந்தால், தமிழகம் சீரழியும்,'' என, தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் மாநில தலைவர் வேலுார் இப்ராஹிம் பேசினார்.வேலுாரில், சிவசக்தி சேனா ஹிந்து மக்கள் இயக்கம் சார்பில் நடந்த, தேர்தல் ஆலோசனை கூட்டத்தில், அவர் பேசியதாவது:காங்., - தி.மு.க., ஆட்சியில்தான், விவசாயிகள் அதிகம் தற்கொலை செய்து கொண்டனர். விவசாய நிலங்கள், கட்டடங்களாக மாற்றப்பட்டன. இப்போது,
 திமுக, இப்ராஹிம், எச்சரிக்கை

வேலுார் : ''குடும்ப ஆட்சி மீண்டும் வந்தால், தமிழகம் சீரழியும்,'' என, தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் மாநில தலைவர் வேலுார் இப்ராஹிம் பேசினார்.

வேலுாரில், சிவசக்தி சேனா ஹிந்து மக்கள் இயக்கம் சார்பில் நடந்த, தேர்தல் ஆலோசனை கூட்டத்தில், அவர் பேசியதாவது:காங்., - தி.மு.க., ஆட்சியில்தான், விவசாயிகள் அதிகம் தற்கொலை செய்து கொண்டனர். விவசாய நிலங்கள், கட்டடங்களாக மாற்றப்பட்டன. இப்போது, விவசாயிகள் நலன் குறித்து பேசுகின்றனர்.


latest tamil news



விவசாயிகளின் நிலத்தை அபகரிக்கும் ஆட்சியாகத்தான், தி.மு.க., இருந்தது. தி.மு.க.,வின் குடும்ப ஆட்சி மீண்டும் வந்தால், தமிழகம் சீரழியும். பிரதமர் மோடி, அவரது ஆட்சி மீது, பழி சொல்ல முடியாத நிலையில், பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணியை மதவாத கூட்டணி என்கின்றனர்.

ஆனால், பா.ஜ., ஆட்சியில் தான், விவசாயிகள், சிறு குறு வியாபாரிகள், சிறுபான்மையின மக்கள் பாதுகாப்பாக உள்ளனர். ஒவ்வொரு திட்டத்துக்கும் ஒதுக்கும் நிதி, மக்களுக்காகத் தான்; குடும்பத்துக்காக அல்ல.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (67)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
p.seetharaman - tirupur,இந்தியா
27-பிப்-202116:17:20 IST Report Abuse
p.seetharaman தி மு க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு அம்பேல் . மு க ஸ்டாலின் ஒரு நாள் கூட முதல் மந்திரி ஆகக்கூடாது
Rate this:
Cancel
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
25-பிப்-202104:15:36 IST Report Abuse
மதுரை விருமாண்டி பாவம்.. நோட்டா கட்சியிலே சேர்ந்த நோட்டாவோட கடும் போட்டி போடப் போறாரு.. அதுக்கு இம்புட்டு பில்டப்பா?
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
24-பிப்-202117:51:11 IST Report Abuse
Malick Raja வேலூர் இப்லீஸ் அவர்கள் சொல்வது பிரமாதம் ..
Rate this:
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
25-பிப்-202104:16:42 IST Report Abuse
மதுரை விருமாண்டிஇப்படிக்கு ஜெட்டா சிவசக்தி சேனா ஹிந்து மக்கள் இயக்க தலைவர் மாலிக் ராஜ்ஜா.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X