போலீசில் டெம்போ உரிமையாளர்கள் புகார் மனு

Added : பிப் 24, 2021
Share
Advertisement
புதுச்சேரி : கொலை மிரட்டல் விடுக்கும் டெம்போ ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, டெம்போ உரிமையாளர் சங்கத்தினர் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் மனு அளித்தனர். புதுச்சேரி ராஜா தியேட்டர் அய்யங்குட்டிப்பாளையம் வழித்தடத்தில் இயங்கும் டெம்போக்களுக்கு, உரிமையாளர்கள் கடந்த வாரம் தினசரி வாடகை ரூ.800ல் இருந்து ரூ.1000 ஆக உயர்த்தினர்.இந்நிலையில், 'உயர்த்தப்பட்ட வாடகையை

புதுச்சேரி : கொலை மிரட்டல் விடுக்கும் டெம்போ ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, டெம்போ உரிமையாளர் சங்கத்தினர் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் மனு அளித்தனர்.

புதுச்சேரி ராஜா தியேட்டர் அய்யங்குட்டிப்பாளையம் வழித்தடத்தில் இயங்கும் டெம்போக்களுக்கு, உரிமையாளர்கள் கடந்த வாரம் தினசரி வாடகை ரூ.800ல் இருந்து ரூ.1000 ஆக உயர்த்தினர்.இந்நிலையில், 'உயர்த்தப்பட்ட வாடகையை கொடுக்க கூடாது', என டெம்போ ஓட்டுநர் இட்லி அரிசி (எ) சதீஷ் என்பவர், டெம்போ ஓட்டுநர்களை மிரட்டுவதாகவும், மீறி டெம்போக்களை அதிக வாடகைக்கு எடுத்து இயக்கினால், வெடிகுண்டு வீசி கொலை செய்து, வண்டியோடு எரித்து விடுவேன் என மிரட்டுவதால், பாதுகாப்பு வழங்க கோரி, பாரத மாதா விக்ரம் உரிமையாளர்கள் நலச் சங்க செயலாளர் முருகையன் தலைமையில் டெம்போ உரிமையாளர்கள், மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். மனுவை பெற்ற போலீசார், நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X