நாராயணசாமி பொய் குற்றச்சாட்டு

Added : பிப் 24, 2021
Share
Advertisement
புதுச்சேரி : அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் மீது வருமான வரித்துறை வழக்கு போடுவதாக நாராயணசாமி, பொய் குற்றச்சாட்டை கூறுகிறார் என பா.ஜ., மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ., கூறினார். அவரது பேட்டி:புதுச்சேரியில் நான்கரை ஆண்டுகள் ஆட்சி செய்த காங்., அரசின் மோசமான நிர்வாகத்தால், தொழில்கள் முடங்கி, ஆலைகள் மூடப்பட்டு, ரேஷன் கடைகள் மூடப்பட்டன. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க

புதுச்சேரி : அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் மீது வருமான வரித்துறை வழக்கு போடுவதாக நாராயணசாமி, பொய் குற்றச்சாட்டை கூறுகிறார் என பா.ஜ., மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ., கூறினார்.

அவரது பேட்டி:புதுச்சேரியில் நான்கரை ஆண்டுகள் ஆட்சி செய்த காங்., அரசின் மோசமான நிர்வாகத்தால், தொழில்கள் முடங்கி, ஆலைகள் மூடப்பட்டு, ரேஷன் கடைகள் மூடப்பட்டன. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியவில்லை. ஒரு சதவீதம் கூட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை. அவர்களது எம்.எல்.ஏ.க்களே அரசை எதிர்த்து போராடும் நிலை ஏற்பட்டு, பதவி விலகியதால், இந்த ஆட்சி கலைந்தது. ஆனால், நாராயணசாமி பா.ஜ., மீது பழிபோடுகிறார்.

புதுச்சேரியில் பல முறை ஆட்சி கவிழ்ப்பு வேலையை காங்., செய்துள்ளது. இப்போது, அவர்கள் மீது நம்பிக்கை இழந்து தாமாகவே கவிழ்ந்துள்ளது. பா.ஜ.,- அ.தி.மு.க.,- என்.ஆர்.காங்., உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஆட்சி அமைக்க உரிமை கோர வாய்ப்பு இல்லை. வரும் சட்டசபை தேர்தலில் நேர்மையாக மக்களை சந்தித்து, வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம். மத்திய பா.ஜ., அரசு, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களை மிரட்டியதாகவும், வருமான வரித் துறையை விட்டு வழக்கு போடுவதாக நாராயணசாமி குற்றம் சாட்டினார். சட்டசபையில் பா.ஜ., எம்.எல்.ஏ.க்கள் ஓட்டளிக்கவில்லை.

ஓட்டெடுப்பும் நடக்காத நிலையில், சட்டசபையில் இருந்து வெளியேறிய நாராயணசாமி, நியமன எம்.எல்.ஏ.க்களால் ஆட்சி கவிழ்ப்பு என குற்றம் சாட்டுவதை வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். எம்.எல்.ஏ.க்கள் செல்வகணபதி, தங்க விக்ரமன் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X