திண்டுக்கல் : வருமான வரித்துறையில் வரி செலுத்துவோருக்கு 'டிஜிட்டல்' காலண்டர் இ மெயிலில் அனுப்பப்படுகிறது.
வருமான வரித்துறை சார்பில் டிஜிட்டல் காலண்டர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 13 பக்கங்களுடன், மாத காலண்டராக உருவாக்கியுள்ளனர். இதில் ஒவ்வொரு பக்கத்திலும் வரி செலுத்துவதன் அவசியம், நன்மைகள், வழிமுறைகளை விளக்கும் வகையில் கார்டூன் படங்களுடன் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
வருமான வரி கணக்கு சார்ந்த முக்கிய தேதிகள் வட்டமிடப்பட்டு உள்ளன. குடியரசு, சுதந்திர தினம் உள்ளிட்ட அரசு விடுமுறை தினங்களும் குறிப்பிட்டு உள்ளனர். வருமான வரித்துறை இணையதளம் www.incometaxindiaefilling.gov.in ல் 'பி.டி.எப்'வடிவில் டவுன்லோடு செய்து பயன்படுத்தலாம். அதில் உதவி எண் விவரங்களும் இடம் பெற்றுள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE