சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் மகள்களை தாக்கிய தந்தை

Added : பிப் 24, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல் பஸ்ஸ்டாண்டில் இரு மகள்களை அடித்து துன்புறுத்திய தொழிலாளியை பொதுமக்கள் போலீசில் பிடித்து கொடுத்தனர்.திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் நேற்று காலை ஒருவர் 2 சிறுமிகளோடு சுற்றி திரிந்தார். ஒருகட்டத்தில் ஆத்திரத்தில் 2 சிறுமிகளையும் கடுமையாக தாக்கினார். சிறுமிகள் கதறி அழுவதைப் பார்த்த பயணிகள் வடக்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.விசாரணையில்

திண்டுக்கல் : திண்டுக்கல் பஸ்ஸ்டாண்டில் இரு மகள்களை அடித்து துன்புறுத்திய தொழிலாளியை பொதுமக்கள் போலீசில் பிடித்து கொடுத்தனர்.

திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் நேற்று காலை ஒருவர் 2 சிறுமிகளோடு சுற்றி திரிந்தார். ஒருகட்டத்தில் ஆத்திரத்தில் 2 சிறுமிகளையும் கடுமையாக தாக்கினார். சிறுமிகள் கதறி அழுவதைப் பார்த்த பயணிகள் வடக்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

விசாரணையில் அந்தநபர் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி நாகராஜ் என்பதும், சிறுமிகள் அவரது மகள்கள் என்றும் தெரிந்தது. கூலித் தொழிலாளியான நாகராஜூக்கும், அவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.மனைவி கோபித்துக் கொண்டு உடுமலைப்பேட்டை பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். அவரை சந்திக்க குழந்தைகளோடு சென்றவர் திண்டுக்கல் வந்துள்ளார். மது போதை அதிகமானதால் சிறுமிகளை தாக்கியுள்ளார் என தெரிந்தது. குழந்தைகளை காப்பகத்தில் ஒப்படைத்த போலீசார் நாகராஜின் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X