புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்றுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 665 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரியில் 10, காரைக்காலில் 5, மாகியில் 12, ஏனாமில் ஒருவர் உட்பட 28 பேருக்கு நேற்று முன் தினம் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதேசமயம், 21 பேர் தொற்றில் இருந்து மீண்டனர்.புதுச்சேரி தர்மாபுரியை சேர்ந்த 60 வயது முதியவர், வம்பா கீரப்பாளையத்தை சேர்ந்த 42 வயது ஆண் இறந்தனர். மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 628 ஆகவும், மீண்டவர்கள் எண்ணிக்கை 38 ஆயிரத்து 784 ஆகவும், இறந்தவர்கள் எண்ணிக்கை 665 ஆகவும் உயர்ந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE