திருக்கனுார் : செல்லிப்பட்டு - பிள்ளை யார்குப்பம் இடையே படுகை அணையில் ரசாயன கழிவுகள் கலந்துள்ளதால் தேங்கிய தண்ணீர் மாசடைந்து மீன்கள் இறக்கின்றன.
திருக்கனுார் அடுத்த செல்லிப்பட்டு- பிள்ளையார்குப்பம் இடையே சங்கராபரணி ஆற்றின் குறுக்கே படுகை அணையின் தண்ணீர் மூலம் செல்லிப்பட்டு, பிள்ளையார் குப்பம் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் பாசன வசதி பெறுகின்றனர்.சில மாதங்களுக்கு முன் பெய்த புயல் மற்றும் தொடர் மழையின் காரணமாக படுகை அணை நிரம்பி தண்ணீர் வழிந்தது. புதுச்சேரி மற்றும் கடலுார், விழுப்புரம் மாவட்ட மக்கள், அதிகளவில் குவிந்ததால், திடீர் சுற்றுலா தளமாக மாறியது.
படுகை அணை பகுதியில் கெமிக்கல் கழிவுகள் கலந்து, தேங்கிய தண்ணீர் முழுவதும் பச்சை நிறமானது. கரையோரங்களில் நீல நிறத்தில் பவுடர் படிந்துள்ளது. இதனால் ஆற்றிலுள்ள மீன்கள் இறந்து வருகின்றன.ரசாயன கழிவு காரணமாக சங்காரபரணி ஆற்று தண்ணீர் முழுவதும் மாசடைந்து, நிலத்தடி நீர்மட்டம் வீணாகும் நிலை உள்ளது. சங்கராபரணி ஆற்றின் தண்ணீரில் கலந்த ரசாயன கழிவுகளை உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.உடனடியாக நடவடிக்கை எடுக்காவிடில் போராட்டங்கள் நடத்தப்படும் என விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE