பொது செய்தி

தமிழ்நாடு

நுாத்தஞ்சேரி குளம் சீரமைக்கப்படுமா?

Added : பிப் 24, 2021
Share
Advertisement
மாடம்பாக்கம் : துார்ந்து கிடக்கும் நுாத்தஞ்சேரி குளம் சீரமைக்கும் பணிகளை, மாடம்பாக்கம் பேரூராட்சி நிர்வாகம், விரைவில் துவக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. தாம்பரம் அருகே உள்ள மாடம்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட, நுாத்தஞ்சேரியில், சர்வே எண், 649ன் கீழ், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த குளம் உள்ளது.இக்குளம், பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாததால், முட்புதர் மண்டி, குப்பை

மாடம்பாக்கம் : துார்ந்து கிடக்கும் நுாத்தஞ்சேரி குளம் சீரமைக்கும் பணிகளை, மாடம்பாக்கம் பேரூராட்சி நிர்வாகம், விரைவில் துவக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

தாம்பரம் அருகே உள்ள மாடம்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட, நுாத்தஞ்சேரியில், சர்வே எண், 649ன் கீழ், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த குளம் உள்ளது.இக்குளம், பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாததால், முட்புதர் மண்டி, குப்பை கொட்டும் இடமாக காட்சி அளிக்கிறது.இது குறித்து, பகுதி மக்கள் கூறியதாவது:நுாத்தஞ்சேரி மற்றும் அதை சுற்றியுள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதற்காக, இக்குளம் வெட்டப்பட்டது. இதை பராமரிப்பதில் பேரூராட்சி நிர்வாகம் போதிய கவனம் செலுத்தவில்லை.

கடைசியாக, இக்குளம் எப்போது புனரமைக்கப்பட்டது என்ற விபரமும், பேரூராட்சி அதிகாரி களுக்கு தெரியவில்லை.உயர் அதிகாரிகள் தலையிட்டு, குளத்தை துார்வாரி சீரமைப்பதுடன், சுற்றியும் நடைபாதை அமைத்து கொடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர். பேரூராட்சி அதிகாரிகள் கூறியதாவது:மொத்தம், 2.96 ஏக்கர் பரப்பு கொண்ட இக்குளத்தை துார்வாரி சீரமைக்க, 1.46 கோடி ரூபாய்க்கு, திட்ட மதிப்பீடு தயாரிக்கப் பட்டுள்ளது.விரைவில், உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று, குளம் சீரமைக்கும் பணிகளை துவக்க உள்ளோம். சீரமைப்பு பணிகளை துவக்கும் முன், குளத்தை மறு அளவீடு செய்ய முடிவு செய்யப் பட்டுள்ளது. அவ்வாறு, அளவீடு செய்யும் போது, ஆக்கிரமிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டால், அவை அகற்றப்பட்டு, பணிகள் செய்யப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X