பொது செய்தி

தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு நேரம் நீடிக்க வலியுறுத்திய வீரர்கள்

Added : பிப் 24, 2021
Share
Advertisement
திண்டுக்கல்: 'ஜல்லிக்கட்டு போட்டியின் நேரத்தை அதிகரிக்க வேண்டும்' என, திண்டுக்கல்லில் மக்கள் குறைதீர் முகாமில் மாடு பிடி வீரர்கள் மற்றும் மாடு உரிமையாளர்கள் மனு கொடுத்தனர்.அதில் கூறியிருப்பது: மாவட்டத்தில் 1500 க்கும் மேற்பட்ட காளைகளும், 1000 க்கும் மேற்பட்ட மாடு பிடி வீரர்களும் உள்ளனர். ஆண்டுதோறும் 20 க்கும் மேற்பட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. கொரோனா

திண்டுக்கல்: 'ஜல்லிக்கட்டு போட்டியின் நேரத்தை அதிகரிக்க வேண்டும்' என, திண்டுக்கல்லில் மக்கள் குறைதீர் முகாமில் மாடு பிடி வீரர்கள் மற்றும் மாடு உரிமையாளர்கள் மனு கொடுத்தனர்.

அதில் கூறியிருப்பது: மாவட்டத்தில் 1500 க்கும் மேற்பட்ட காளைகளும், 1000 க்கும் மேற்பட்ட மாடு பிடி வீரர்களும் உள்ளனர். ஆண்டுதோறும் 20 க்கும் மேற்பட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. கொரோனா காரணமாக இந்தாண்டு 5 இடங்களில் காலை 9:00 முதல் மதியம் 2:00 மணி வரை மட்டுமே நடத்த அனுமதி அளித்துள்ளனர். இதனால் காளைகளை அவிழ்த்து விடாமல் திருப்பி அனுப்புவதால் மாடு பிடிவீரர்களும், மாடு உரிமையாளர்களும் ஏமாற்றம் அடைகின்றனர். பிற மாவட்டங்களில் மாலை 6:00 மணி வரை நடத்த அனுமதிப்பதால், திண்டுக்கல்லிலும் ஜல்லிக்கட்டு நேரத்தை நீட்டிக்க வேண்டும், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X