புதுச்சேரி, : புதுச்சேரி கலால் துறை சார்பில், புதுச்சேரி, கடலுார், விழுப்புரம் மாவட்ட போலீஸ் ஒருங்கிணைப்பு கூட்டம் நேற்று நடந்தது.
புதுச்சேரி மற்றும் தமிழக சட்டசபை தேர்தல் தேதி விரைவில் அறிக்கப்பட உள்ளது. தேர்தலை முன்னிட்டு, எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து, புதுச்சேரி கலால் துறை சார்பில், புதுச்சேரி, கடலுார், விழுப்புரம் மாவட்ட போலீஸ் ஒருங்கிணைப்பு கூட்டம், தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது.கலால் துறை ஆணையர் அபிஜித் விஜய் சவுத்ரி தலைமை தாங்கினார். கலால் துணை ஆணையர் சுதாகர், போலீஸ் எஸ்.பி.,க்கள் செல்வம், ரட்சனா சிங், கடலுார் ஏ.டி.எஸ்.பி. பாண்டியன், டி.எஸ்.பி. ஸ்ரீதரன், விழுப்புரம் டி.எஸ்.பி., இளங்கோவன், கலால்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
தேர்தல் நேரத்தில் மதுபானங்கள் விற்பனை நேரத்தை குறைப்பது, மதுபானங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்துதல், மதுபான விற்பனை குடோன்களில் சி.சி.டி.வி., கேமரா பொருத்துதல், மாவட்ட எல்லையில் கண்காணிப்பை தீவிர மாக்குதல், மதுபான கடத்தல் குற்றவாளிகளை கண்காணிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.புதுச்சேரி - தமிழக கலால் அதிகாரிகள், போலீசார் ஒருங்கிணைந்து, எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE