பொது செய்தி

தமிழ்நாடு

மழையால் பருத்தி சாகுபடி பாதிப்பு

Added : பிப் 24, 2021
Share
Advertisement
கன்னிவாடி: கன்னிவாடி பகுதியில் சிலநாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால் பருத்தி சாகுபடி பாதித்துள்ளது.கன்னிவாடி அருகே கரிசல்பட்டி, கோனுார், சின்னப்பபுரம், அலவாச்சிபட்டி, மைலாப்பூர், குட்டத்துப்பட்டி, திப்பம்பட்டி பகுதியில் விவசாயிகள் பலர் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். சமீபத்திய மழையால் பெருமளவு நிலங்களில் பருத்தி செடிகள் பாதித்துள்ளன.பூக்கள் உதிர்ந்த

கன்னிவாடி: கன்னிவாடி பகுதியில் சிலநாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால் பருத்தி சாகுபடி பாதித்துள்ளது.

கன்னிவாடி அருகே கரிசல்பட்டி, கோனுார், சின்னப்பபுரம், அலவாச்சிபட்டி, மைலாப்பூர், குட்டத்துப்பட்டி, திப்பம்பட்டி பகுதியில் விவசாயிகள் பலர் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். சமீபத்திய மழையால் பெருமளவு நிலங்களில் பருத்தி செடிகள் பாதித்துள்ளன.பூக்கள் உதிர்ந்த நிலையில், செடிகள் அழுகி வீணானது. மகசூல் பாதிப்பால், விவசாயிகள் கவலையில் உள்ளனர். நிவாரணம் எதிர்பார்க்கும் சூழலில், சிலர் பருத்தி வியாபாரிகளாக மாறி விட்டனர்.

கரிசல்பட்டி விவசாயி எம்.முத்துலட்சுமி:பருத்தி சாகுபடி பரப்பு சிலஆண்டுகளாக போதிய மழையின்றி குறைந்துள்ளது. பலர் கைவிட்ட நிலையில் சிலரது சாகுபடி முயற்சியும் ஏமாற்றத்தை அளித்தது. கூலித்தொழிலாளர்கள் பலர் பாதித்துள்ளனர். சில விவசாயிகள் வியாபாரிகளாக மாறியுள்ளனர்.

நிலக்கோட்டை, விராலிபட்டி பகுதிகளில் வாங்கி வந்து, தரம் பிரித்தல், உலர்த்தல், மூடையிட்டு விற்பனை செய்வதில் ஈடுபட்டுள்ளனர். கடந்தாண்டு கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை இருந்த பருத்தி, தற்போது மகசூல் பாதிப்பால் ரூ.57 வரை விற்பனையில் உள்ளது. கோடை பருத்தி சாகுபடிக்கு சிலர் தயாராகி வருகின்றனர், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X