திண்டுக்கல்: திண்டுக்கல்லில் மோட்டார் பொருத்திய தையல் மெஷின் பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்.
கால்கள் பாதிக்கப்பட்ட, காது கேளாத, வாய் பேசாத, மனவளர்ச்சி குன்றியவர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 75 சதவீதத்திற்கும் மேல் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளியின் தாய்மார்களுக்கு இலவசமாக மோட்டார் பொருத்திய தையல் மெஷின் வழங்கப்பட உள்ளது. தேசிய அடையாள அட்டை, ஆதார் நகல், தையல் பயிற்சி சான்று, ரேஷன் கார்டு நகலுடன் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் பிப்.28க்குள் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு 0451-246 0099ல் பேசலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE