சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தாம்பரத்தில் குப்பைக்கு கட்டணம் வசூல்?

Added : பிப் 24, 2021
Share
Advertisement
தாம்பரம் நகராட்சியில், வணிக நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் குப்பைக்கு கட்டணம் வசூலிக்க, நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.தாம்பரம் நகராட்சியில் உள்ள, 39 வார்டுகளில், 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஒரு லட்சத்து, 74 ஆயிரத்து, 787 பேர் வசிக்கின்றனர். 4,000க்கும் மேற்பட்ட கடைகள் உட்பட, வணிக நிறுவனங்கள் உள்ளன. நகராட்சி பகுதியில், தினசரி, 100 டன் குப்பை

தாம்பரம் நகராட்சியில், வணிக நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் குப்பைக்கு கட்டணம் வசூலிக்க, நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.தாம்பரம் நகராட்சியில் உள்ள, 39 வார்டுகளில், 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஒரு லட்சத்து, 74 ஆயிரத்து, 787 பேர் வசிக்கின்றனர்.

4,000க்கும் மேற்பட்ட கடைகள் உட்பட, வணிக நிறுவனங்கள் உள்ளன. நகராட்சி பகுதியில், தினசரி, 100 டன் குப்பை உருவாகிறது. இவற்றில், 30 டன் குப்பையில் இருந்து, உரம் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. மீதமுள்ள குப்பை, வண்டலுாரை அடுத்த வேங்கடமங்கலத்தில் செயல்படுத்தப்பட்டு வந்த, ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.வேடமங்கலத்தில், தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், நகராட்சி களின் குப்பை கொட்டப்பட்ட நிலையில், அங்கு, உரம் தயாரிக்கும் பணியை செய்து வந்த தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தம், 2019ல் ரத்து செய்யப்பட்டது.

அதன்பின், இந்த கிடங்கை, மூன்று நகராட்சிகளும் பராமரித்து வந்தன. ஆனால், உரம் தயாரிப்பதை நிறுத்தி, குப்பை தேக்கும் இடமாகவே, அதை மாற்றின. நாள்தோறும், 150 டன்னுக்கும் அதிகமான மக்காத குப்பை கொட்டப்பட்டதால், பகுதி மக்கள் பாதிப் படைந்தனர். இது சம்பந்தமான வழக்கை விசாரித்த, தேசிய பசுமை தீர்ப்பாயம், குப்பையை கையாளுவதற்கான உபகரணங்களை ஏற்படுத்தாமல், குப்பை கொட்டக்கூடாது' என, தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, வேங்கடமங்கலத்தில் குப்பை கொட்டுவது நிறுத்தப்பட்டது. தாம்பரம் நகராட்சி, சில மாதங்கள் பெருங்குடியிலும், கொடுங்கையூரிலும் குப்பைகளை கொட்டி வந்தது. அங்கும், தடை விதிக்கப்பட்டதால், நகராட்சிக்கு உட்பட்ட, கன்னடபாளையத்திலேயே, மூன்று மாதங்களாக குப்பை கொட்டப்பட்டது.

மலை போல் குப்பை தேங்கியதால், கிடங்கை மூட, நகராட்சி கமிஷனர் சித்ரா, சில தினங்களுக்கு முன் உத்தரவிட்டார்.இதன்பின், நகராட்சி பகுதியில் வீடுகள் தோறும், குப்பை பெறுவதில் தொய்வு ஏற்பட்டு, சாலையோரம் மீண்டும் கொட்டப்பட்டு வருகிறது.இந்நிலையில், கொடுங்கையூரில் குப்பை கொட்ட, நகராட்சி நிர்வாகம் மீண்டும் அனுமதி பெற்றுள்ளதாகவும், அங்கு குப்பை கொண்டு செல்லப்பட உள்ளதாகவும், தகவல் வெளியாகி உள்ளது.அதேநேரம், உணவு விடுதிகள், பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் குப்பைக்கு, கிலோவுக்கு, 4 ரூபாய் வீதம் கட்டணம் வசூலிக்கவும், நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:அமலில் உள்ள, 2016 - திடக்கழிவு மேலாண்மை விதிப்படி, மொத்தமாக, 100 கிலோவுக்கு மேல் குப்பை உருவாக்குவோர், தாங்களே குப்பையை தரம் பிரித்து, உரம் தயாரிப்பதுடன், மக்காத குப்பையை மட்டுமே, எங்களின் துாய்மை பணியாளர் களிடம் வழங்க வேண்டும்.அதை, நகராட்சி பகுதியில் உள்ள வணிக நிறுவனத்தினர் பின்பற்றுவதில்லை. இதனால், அவர்களிடம் இருந்து பெறப்படும் குப்பையை தரம் பிரிக்க, தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதற்காக, தனியார் நிறுவனமும், வணிக நிறுவனங்களிடமிருந்து, குப்பையை பெற, கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளது.

அந்த கட்டணத்தை வரைமுறைப்படுத்தி, பொது மக்களுக்கு ஏற்ற வகையில் நிர்ணயித்து கொடுக்க உள்ளோம். இவ்வாறு நிர்ணயிக்கப்படும் கட்டணம், அதிகமாக இருக்காது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X