திண்டுக்கல்: திண்டுக்கல்லில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். செயலாளர் செல்வ தனபாக்கியம் முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் விஜயகுமார், சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் பிரபாகரன் பேசினர்.'சட்டசபையில் 110 விதியின் கீழ் அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்களை அரசு ஊழியராக்குவேன் என ஜெயலலிதா அறிவித்ததை அரசு அமல்படுத்த வேண்டும். அகவிலையுடன் கூடிய ஓய்வூதியம் அறிவிக்க வேண்டும். பணி ஓய்வின் போது ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்' என வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE