புதுச்சேரியில் தொகுதி பங்கீடு: ஸ்டாலின் ஆலோசனை

Added : பிப் 24, 2021
Share
Advertisement
புதுச்சேரி : தி.மு.க., தலைவர் ஸ்டாலினை, புதுச்சேரி மாநில தி.மு.க., அமைப்பாளர்கள் மூவரும் நேற்று சந்தித்து பேசினர். புதுச்சேரியில் காங்., எம்.எல்.ஏ.,க்களை தொடர்ந்து, தி.மு.க., எம்.எல்.ஏ., வெங்கடேசன் பதவியை ராஜினாமா செய்தது, தி.மு.க., வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, காங்., - தி.மு.க., ஆட்சி கவிழ்ந்து, அமைச்சரவை ராஜினாமா செய்துள்ளது.இது போன்ற பரபரப்பான

புதுச்சேரி : தி.மு.க., தலைவர் ஸ்டாலினை, புதுச்சேரி மாநில தி.மு.க., அமைப்பாளர்கள் மூவரும் நேற்று சந்தித்து பேசினர்.

புதுச்சேரியில் காங்., எம்.எல்.ஏ.,க்களை தொடர்ந்து, தி.மு.க., எம்.எல்.ஏ., வெங்கடேசன் பதவியை ராஜினாமா செய்தது, தி.மு.க., வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, காங்., - தி.மு.க., ஆட்சி கவிழ்ந்து, அமைச்சரவை ராஜினாமா செய்துள்ளது.இது போன்ற பரபரப்பான அரசியல் சூழ்நிலை யில், கட்சி தலைமையின் அழைப்பையேற்று வடக்கு மாநில தி.மு.க., அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார், தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., காரைக்கால் மாவட்ட அமைப்பாளர் நாஜிம் ஆகியோர் நேற்று அண்ணா அறிவாலயம் விரைந்தனர்.

அங்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினர். புதுச்சேரி அரசியல் நிலவரம் குறித்து கேட்டறிந்த ஸ்டாலின், கூட்டணி, சீட் பங்கீடு, தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.பொதுச் செயலாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் நேரு, திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் வேலு உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X