சென்னை : ஆள் மாறாட்டம், போலி ஆவணங்கள் வாயிலாக, 1.5 கோடி ரூபாய் மதிப்பு நிலத்தை அபகரித்த இருவரை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சென்னை, பள்ளிக்கரணை, ஸ்ரீகாமகோடி நகரைச் சேர்ந்தவர் செல்வம், 52. இவருக்கு, அதே பகுதியில், 1.5 கோடி ரூபாய் மதிப்பு காலி மனை உள்ளது. இந்த நிலத்தில், மர்ம நபர்கள், 'துளசி ஹேப்பி ஹோம்ஸ்' என்ற பெயரில், வீடு கட்டி விற்க முயன்றுள்ளனர். செல்வம், வில்லங்க சான்று பெற்றபோது, இவரது நிலம், கிரிபிரசாத் என்பவரின் பெயரில் இருந்தது தெரியவந்தது. இவர், துளசி ஹேப்பி ஹோம்ஸ் நிறுவனத்திற்கு விற்றது தெரியவந்தது.இதுகுறித்து, செல்வம், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, மத்திய குற்றப்பிரிவு நில மோசடி தடுப்பு பிரிவு போலீசார், நேற்று, பள்ளிக்கரணை, 200 அடி சாலையைச் சேர்ந்த கிரிபிரசாத், 40, என்பவரை பிடித்தனர்
.அப்போது, கிரிபிரசாத் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ரகு, குமரேசன், மோகனா, நாகேந்திர சிங் சவுகான் ஆகியோர், ஆள்மாறாட்டம் மற்றும் போலி ஆவணங்கள் வாயிலாக, செல்வத்தின் நிலத்தை அபகரித்தது தெரியவந்தது. கிரிபிரசாத், 40 மற்றும் ரகு, 47 ஆகியோரை நேற்று கைது செய்த போலீசார், மற்றவர்களை தேடுகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE