புதுச்சேரி : காங்., கட்சியில் இருந்து விலகிய லட்சுமிநாராயணனுக்கு, முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் வாழ்த்து தெரிவித்தார்.காங்., ஆட்சியில் முதல்வரின் பார்லிமெண்ட் செயலராக பதவி வகித்த லட்சுமி நாராயணன், கடந்த 21ம் தேதி எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து சபாநாயகரிடம் கடிதம் அளித்தார்.
அவரை, முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்; பா.ஜ.,வுக்கு வருமாறும் அழைப்பு விடுத்தார்.லட்சுமிநாராயணனிடம் கேட்டபோது, 'என்.ஆர். காங்., - பா.ஜ., உள்ளிட்ட பல கட்சிகளில் இருந்து அழைப்பு வந்துள்ளது. இருந்தபோதும் எந்த முடிவும் எடுக்கவில்லை. எனது ஆதரவாளர்கள், தொகுதி மக்களுடன் கலந்து பேசி அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE