ஆவடி : 'பறவைக்கு கை கொடுப்போம்' முயற்சியால், ஆவடி பசுமை பூங்காவில், பறவைகள் குவிகின்றன.ஆவடியில் உள்ள, பருத்திப்பட்டு ஏரி, 28.15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு, பசுமை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பூங்காவிற்கு பறவைகளை வரவழைக்க, 44.81 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஏரியின் நடுவே செயற்கை தீவு உருவாக்கப்பட்டது.அடர் வன நடவு முறையில், இந்த தீவில், 1,200க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.பெலிக்கன் என்ற வெளிநாட்டு பறவைகள்உட்பட, பல்வேறு வகையான பறவைகள், பசுமை பூங்காவில் குவிகின்றன.மேலும் மனிதர்களுக்கும், பறவைகளுக்கும் நெருக்கத்தை ஏற்படுத்த, ஏரிக்கரை பார்வை மாடத்தில், தானியங்கள் வைப்பதற்கான, 'பவுல்' சிமென்டால் அமைக்கப்பட்டது.
அதில், நடை பயிற்சி செல்வோர் தானியங்களை இட்டுச் சென்றனர். புறாக்கள், காகங்கள் அதிகமாக தானியங்களை சாப்பிட குவிந்ததால், நடை பயிற்சி செல்வோர், மகிழ்ச்சியாக பார்த்து, ரசித்துச் சென்றனர்.கொரோனா பரவலால் பூங்கா மூடப்பட்டு, தானியங்கள் இல்லாததால் பறவைகள் வருகையும் குறைந்தது.இந்நிலையில், மீண்டும் பூங்கா திறக்கப்பட்டதால், நடை பயிற்சி செல்வோர், தானியங்களை இட்டுச் செல்வதை துவங்கியுள்ளனர். இதனால்,பூங்கா செயற்கை தீவில் மீண்டும், பறவைகள் குவியத் துவங்கியுள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE