பொது செய்தி

இந்தியா

முதுநிலை மருத்துவ படிப்பிற்கு கடந்த ஆண்டு கட்டணம் வசூலிக்க கோரிக்கை

Added : பிப் 24, 2021
Share
Advertisement
புதுச்சேரி : முதுநிலை மருத்துவ படிப்பிற்கு கடந்தாண்டு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என மாணவர் பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சங்க தலைவர் பாலா விடுத்துள்ள அறிக்கை:தேசிய தேர்வு முகமை, 2021-22ம் ஆண்டிற்கான முதுநிலை மருத்துவம், பல் மருத்துவ படிப்பு (எம்.டி., எம்.எஸ்.) படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வுக்கு, நேற்று முதல் விண்ணப்பிக்க அறிவுறுத்தி உள்ளது.

புதுச்சேரி : முதுநிலை மருத்துவ படிப்பிற்கு கடந்தாண்டு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என மாணவர் பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சங்க தலைவர் பாலா விடுத்துள்ள அறிக்கை:தேசிய தேர்வு முகமை, 2021-22ம் ஆண்டிற்கான முதுநிலை மருத்துவம், பல் மருத்துவ படிப்பு (எம்.டி., எம்.எஸ்.) படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வுக்கு, நேற்று முதல் விண்ணப்பிக்க அறிவுறுத்தி உள்ளது. ஏப்ரல் 18 ம் தேதி தேர்வும், மே 31ம் தேதி தேர்வு முடிவு வெளியாகும்.கடந்த ஆண்டு பிம்ஸ், மணக்குள விநாயகர், வெங்கடேஸ்வார கல்லுாரிகளில் 169 முதுநிலை மருத்துவ படிப்பில், 50 சதவீத இடஒதுக்கீடாக 84 இடங்கள் பெறப்பட்டன. கல்வி கட்டணமாக மருத்துவ படிப்பிற்கு ரூ. 7.5 லட்சம், நான் கிளினிக்கல் படிப்பிற்கு ரூ. 6.22 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்தாண்டும் 50 சதவீத இடஒதுக்கீட்டு இடங்களை பெற்று கலந்தாய்வு நடத்த வேண்டும். சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல்படி, அந்தந்த மாநில அரசின் கல்வி கட்டண குழு நிர்ணயித்த கல்வி கட்டணம் வசூலிக்க வேண்டும். கல்வி கட்டண கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். புதுச்சேரியில் கல்வி கட்டண கண்காணிப்பு குழு இல்லை. அதனால், கடந்தாண்டு நிர்ணயித்த கட்டணத்தையே இந்தாண்டும் நிர்ணயிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X