பொது செய்தி

தமிழ்நாடு

பழநி மாரியம்மன் கோயிலில் மாசித்திருவிழா கொடியேற்றம்

Added : பிப் 24, 2021
Share
Advertisement
பழநி: பழநி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவில் கொடியேற்றமும், கம்பத்திற்கு பூவோடு வைக்கும் விழாவும் நடந்தது.பழநி மாரியம்மன் கோயிலில் மாசித்திருவிழா பிப்.12ல் துவங்கி மார்ச் 4 வரை நடக்கிறது. பிப்.16 ல் திருக்கம்பம் அலங்கரிக்கப்பட்டு கோயில் முன்பு நடப்பட்டது. அதில் பக்தர்கள் பால், மஞ்சள் நீர் ஊற்றி வழிபடுகின்றனர்.நேற்று (பிப்.,23) மாரியம்மன் சன்னதியிலுள்ள கொடி

பழநி: பழநி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவில் கொடியேற்றமும், கம்பத்திற்கு பூவோடு வைக்கும் விழாவும் நடந்தது.

பழநி மாரியம்மன் கோயிலில் மாசித்திருவிழா பிப்.12ல் துவங்கி மார்ச் 4 வரை நடக்கிறது. பிப்.16 ல் திருக்கம்பம் அலங்கரிக்கப்பட்டு கோயில் முன்பு நடப்பட்டது. அதில் பக்தர்கள் பால், மஞ்சள் நீர் ஊற்றி வழிபடுகின்றனர்.நேற்று (பிப்.,23) மாரியம்மன் சன்னதியிலுள்ள கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்து இரவு 7:20 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. திருக்கம்பத்தில் பூவோடு வைக்கப்பட்டது.

மேலும் தங்க மயில் வாகனத்தில் அம்மன் திருஉலா நடந்தது. மாரியம்மன் கோயிலில் மார்ச் 2ல் திருக்கல்யாணம், மார்ச் 3ல் தேரோட்டம் நடக்க உள்ளது. மார்ச் 4 ல் கொடியிறக்குதலுடன் விழா நிறைவு பெறும்.மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தியபடி வணங்கி வருகின்றனர். செயல் அலுவலர் கிராந்திகுமார் பாடி, துணை ஆணையர் செந்தில்குமார் செய்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X