சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கள்ளத்தனமாக மது விற்றவர்கள் கைது///

Added : பிப் 24, 2021
Share
Advertisement
குரோம்பேட்டை : நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, குரோம்பேட்டையில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்த இருவரை, போலீசார் கைது செய்தனர். குரோம்பேட்டை காவல் நிலைய எல்லையில், பேருந்து நிலையம், எம்.ஐ.டி., மேம்பாலத்தின் கீழ், 'டாஸ்மாக்' கடைகள் இயங்குகின்றன.இந்த கடைகளில், அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பும், கடை மூடப்பட்ட பிறகும், கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வந்தது. அதிகாலை,

குரோம்பேட்டை : நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, குரோம்பேட்டையில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்த இருவரை, போலீசார் கைது செய்தனர்.

குரோம்பேட்டை காவல் நிலைய எல்லையில், பேருந்து நிலையம், எம்.ஐ.டி., மேம்பாலத்தின் கீழ், 'டாஸ்மாக்' கடைகள் இயங்குகின்றன.இந்த கடைகளில், அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பும், கடை மூடப்பட்ட பிறகும், கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வந்தது. அதிகாலை, 5:00 மணி முதல் கூடுதல் விலைக்கு சரக்கு விற்பனை நடைபெறுகிறது. வழக்கமாக, 'டாஸ்மாக்' கடைகளில் கிடைக்கும்சரக்குகள் கூட, அதிகாலை மற்றும் நள்ளிரவுநேரங்களில், கள்ள சந்தையில் கிடைப்பதால், அதை வாங்க கூட்டம் குவிகிறது.

இதனால், இளைஞர்கள், கூலி வேலைக்கு செல்வோர் என, பல்வேறு தரப்பினரும் சீரழியும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று, சில நாட்களுக்கு முன், நம் நாளிதழில் செய்தி வெளியானது.இதையடுத்து, குரோம்பேட்டை போலீசார் சோதனை நடத்தி, எம்.ஐ.டி., மேம்பாலத்தின் கீழ் இயங்கும் 'டாஸ்மாக்' கடைகளில், கள்ளத்தனமாக மது விற்பனை செய்த, ராமநாதபுரத்தை சேர்ந்த ராஜேஷ், 26, சங்கர், 36, ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 20 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நடவடிக்கை பெயருக்காக இல்லாமல், தொடர்ந்து குடிமையங்களை கண்காணித்து, கள்ள மது விற்பனையை நிரந்தரமாக தடுக்க வேண்டும் என்று, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X