சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மூதாட்டி வங்கி கணக்கில் ரூ.28 ஆயிரம் 'அபேஸ்'

Added : பிப் 24, 2021
Share
Advertisement
கோடம்பாக்கம் : வங்கி மேலாளர் போல் பேசி, மூதாட்டியின் வங்கி கணக்கிலிருந்து, 28 ஆயிரம் ரூபாயை மர்மநபர்கள் திருடியுள்ளனர். கோடம்பாக்கம், டாக்டர் கோபாலமேனன் தெருவைச் சேர்ந்தவர், ரோஸ்மேரி, 71. நேற்று முன்தினம், அவரது மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசிய மர்மநபர், தன்னை ஒரு வங்கியின் மேலாளர் என அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினார். வங்கி சேமிப்பு அட்டையை புதுப்பிக்க வேண்டும் என

கோடம்பாக்கம் : வங்கி மேலாளர் போல் பேசி, மூதாட்டியின் வங்கி கணக்கிலிருந்து, 28 ஆயிரம் ரூபாயை மர்மநபர்கள் திருடியுள்ளனர்.

கோடம்பாக்கம், டாக்டர் கோபாலமேனன் தெருவைச் சேர்ந்தவர், ரோஸ்மேரி, 71. நேற்று முன்தினம், அவரது மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசிய மர்மநபர், தன்னை ஒரு வங்கியின் மேலாளர் என அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினார். வங்கி சேமிப்பு அட்டையை புதுப்பிக்க வேண்டும் என கூறி, ரகசிய எண் உள்ளிட்டவற்றை வாங்கினார்.சிறிது நேரத்தில், ரோஸ்மேரியின் மொபைல் எண்ணிற்கு குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அதில், 28 ஆயிரம் ரூபாய், வங்கி கணக்கிலிருந்து எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டு இருந்தது. இதுகுறித்து வங்கியை தொடர்பு கொண்டு கேட்டபோது, ஏமாற்றப்பட்டுள்ளதை அறிந்தார்.ரோஸ்மேரியின் புகாரின் அடிப்படையில், கோடம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X