சென்னை : மெட்ரோ ரயில் நிலையங்களில், பெண் பயணியருக்கு, இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் சேவையை, அமைச்சர், எம்.சி.சம்பத் துவங்கி வைத்தார்.
மெட்ரோ ரயில் நிர்வாகம் மற்றும் ரோட்டரி கிளப் சங்கம் ஆதரவுடன், ஜியோ இந்தியா பவுண்டேஷன் தொண்டு நிறுவனம் சார்பில், சென்னையில் உள்ள, 39 மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் நிர்வாக அலுவலகங்களில், பெண் பயணியருக்கு, இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் சேவை, நேற்று துவங்கப்பட்டது.இதை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் பிரதீப் யாதவ் முன்னிலையில், தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் துவங்கி வைத்தார். இந்நிகழ்வில், மெட்ரோ நிறுவாகத்தின், உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE