புதுச்சேரி, : ஐதராபாத்தைச் சேர்ந்த கிரமோதயா சேம்பர் ஆப் காமர்ஸ் அண்ட் டெக்னாலஜி நிறுவனத்தின் 11 பேர் கொண்ட குழுவினர், கும்ப சந்தேஷ் யாத்திரா தலைப்பில், நாடு முழுவதும் யாத்திரை மேற்கொள்கின்றனர்.
கடந்த 20ம் தேதி ஐதராபாத்தில் துவங்கிய யாத்திரை, திருப்பதி, சென்னை வழியாக நேற்று புதுச்சேரி வந்தது. யாத்திரை திருச்சி, ராமேஸ்வரம், கன்னியாக்குமரி,சீரடி, வாரணாசி, மதுரா, டில்லி வழியாக மார்ச் 31ம் தேதி ஹரித்துவாரில் நிறைவு செய்கிறது.யாத்திரை ஒருங்கிணைப் பாளர் சீனிவாச ரெட்டி கூறுகையில், முனிவர்கள், ரிஷிகள் கும்ப மேளாவில் ஒன்றிணைந்து, சமூக சூழல்கள் குறித்து தகவல்களை பகிர்வதை கும்ப சந்தேஷ் என்பர். ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை அர்த்த கும்ப மேளாவும், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூர்ண கும்ப மேளா என வடிவமைத்துள்ளனர்.
இந்த யாத்திரை மூலம், இந்திய கலாசார மரபு சார்ந்த அறிவியல் முறைகளை ஊக்கப் படுத்துதல், சித்தர்களின் மருத்துவ முறை, மண் சார்ந்த சுதேச மருத்துவ முறைகள் மற்றும் நாட்டுப்புற கலைகளை வெளிக்கொணர்ந்து நடைமுறைக்கு கொண்டுவர முயற்சி செய்யப்படும், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE