புதுச்சேரி : மாற்றுத் திறனாளி களுக்கான விளையாட்டு போட்டி வரும் 26ம் தேதி நடக்கிறது.
சமூக நலத்துறை இயக்குநர் பத்மாவதி விடுத்துள்ள செய்திக் குறிப்பு:கொரோனா பரவல், தொடர் மழை காரணமாக தள்ளி வைக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் விளையாட்டு போட்டிகள், வரும் 26ம் தேதி, உப்பளம், இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது.போட்டியில் பங்கேற்க விரும்புவோர் வரும் 26ம் தேதி, காலை 7 மணிக்கு, இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்திற்கு வந்து, பெயரை பதிந்து பங்கேற்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE