பொது செய்தி

இந்தியா

பிரதமர் வருகையையொட்டி போக்குவரத்து மாற்றம்

Added : பிப் 24, 2021
Share
Advertisement
புதுச்சேரி : பிரதமர் வருகையையொட்டி, நாளை 25ம் தேதி, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து சீனியர் எஸ்.பி., ராகுல்அல்வால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;நாளை 25ம் தேதி, பிரதமர் புதுச்சேரி வருகை யொட்டி, முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திண்டிவனம் பைபாஸ் சாலையிலிருந்து புதுச்சேரி வரும் வாகனங்கள், கோரிமேடு போக்குவரத்து முனைய

புதுச்சேரி : பிரதமர் வருகையையொட்டி, நாளை 25ம் தேதி, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து சீனியர் எஸ்.பி., ராகுல்அல்வால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;நாளை 25ம் தேதி, பிரதமர் புதுச்சேரி வருகை யொட்டி, முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திண்டிவனம் பைபாஸ் சாலையிலிருந்து புதுச்சேரி வரும் வாகனங்கள், கோரிமேடு போக்குவரத்து முனைய சாலை வழியாக மேற்கு நோக்கி சென்று, மேட்டுப் பாளையம் சந்திப்பு, மூலக்குளம் வழியாக விழுப்புரம் சாலை, இந்திரா சிக்னல், நெல்லித்தோப்பு வழியாக பஸ் நிலையம் செல்ல வேண்டும்.

சென்னை இ.சி.ஆர். வழியாக வரும் வாகனங்கள், சிவாஜி சிலை சந்திப்பில் இருந்து கிழக்கு நோக்கி திரும்பி, ஏழைமாரியம்மன் கோவில், அஜந்தா சிக்னல், எஸ்.வி. பட்டேல் சாலை, செஞ்சி சாலை, புஸ்சி வீதி வழியாக பஸ் நிலையம் வரவேண்டும்.பத்துக்கண்ணு வழுதாவூர் சாலை வழியாக வரும் வாகனங்கள், மேட்டுப்பாளையம் சந்திப்பில் இருந்து தெற்கு அல்லது வடக்கு நோக்கி திரும்பி செல்ல வேண்டும்.பொதுக்கூட்டத்திற்கு வரும் வாகனங்கள் அனைத்தும், இந்திரா சிக்னல், நெல்லித்தோப்பு, திருவள்ளுவர் சாலை, காமராஜர் சாலை, 45 அடி சாலை, அண்ணா சாலை, அஜந்தா, சிவாஜி சிலை, கருவடிக்குப்பம் சாலை, கல்லுாரி சாலை வழியாக செல்ல வேண்டும்.

கல்லுாரி சாலையில் பொதுமக்களை இறக்கி விட்டு, மடுவுபேட் வழியாக சென்று, விவேகானந்தா பள்ளி திடலில் பஸ்களை நிறுத்த வேண்டும்.கார்கள் தாகூர் கல்லுாரி வளாகத்திலும், இரு சக்கர வாகனங்கள், நாவலர் நெடுஞ்சழியன் பள்ளி வளாகம், மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லுாரி வளாகத்தில் நிறுத்த வேண்டும்.பிரதமர் வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு, இ.சி.ஆரில், மடுவுபேட் முதல் ராஜிவ் சிக்னல், கோரிமேடு வரை எந்த வாகனம் செல்லவும் அனுமதி இல்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X