அச்சிறுப்பாக்கம், : கட்டண பிரச்னை காரணமாக, ஆத்துார் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய, தே.மு.தி.க., நிர்வாகி கள் மூவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில், பெட்ரோல், டீசல், 'காஸ்' விலை உயர்வை கண்டித்து, தே.மு.தி.க., சார்பில், நேற்று, ஆர்ப்பாட்டம் நடந்தது. அதை முடித்து, அக்கட்சியின் விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள், சுந்தரேசன், தயாநிதி உள்ளிட்ட ஐந்து பேர், காரில் சென்னை நோக்கிச் சென்றனர். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, செங்கல்பட்டு மாவட்டம், ஆத்துார் சுங்கச்சாவடிக்கு வந்தபோது, 'பாஸ்டேக்' இல்லாததால், காருக்கு, இரு மடங்கு கட்டணம் செலுத்தும்படி, ஊழியர்கள் கேட்டுள்ளனர்.இது தொடர்பாக, தே.மு.தி.க., நிர்வாகிகள் மற்றும் சுங்கச்சாவடி ஊழியர்கள் இடையே, வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அக்கட்சி தொண்டர்கள் கூடுதலாக வந்து, சுங்கச்சாவடி, ஒன்பது, 10வது பூத்துகளை, அடித்து நொறுக்கினர். இது, அவ்வழியே வந்த வாகன ஓட்டிகளிடம் பதற்றத்தை ஏற்படுத்தியது.தகவலறிந்து வந்த அச்சிறுப்பாக்கம் போலீசார், திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த தே.மு.தி.க., நிர்வாகிகள் அப்பு, வேந்தன், மதி ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் விசாரித்து வருகின்றனர். சுங்கச்சாவடி பகுதியில் பதற்றம் நிலவுவதால், போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE