புதுச்சேரி, : கொலைவெறி கும்பலிடம் இருந்து வாலிபரை காப்பாற்றிய, போக்குவரத்து காவலர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப் பட்டது.
புதுச்சேரி திப்பு சாகிப் வீதியைச் சேர்ந்த சையதுகான், 28; லபோர்தனே வீதியில் உள்ள எல்.பி., -2 லான்ச் என்ற தனியார் பார் ரெஸ்டாரண்டில், பவுன்சராக பணியாற்றினார். பாரில் குடிக்க வந்த ரவுடி கும்பலுக்கும், சையது கானுக்கும் முன்விரோதம் ஏற்பட்டது.கடந்த 19ம் தேதி, சையது கானை, ரவுடி கும்பல் பட்டா கத்தியுடன் மோட்டார் சைக்கிளில் துரத்தியது. செஞ்சி சாலை, அரசு மருத்துவமனை அருகே தவறி விழுந்த சையதுகானை, ரவுடி கும்பல், கொலை செய்ய சுற்றி வளைத்தது.
அப்போது, செஞ்சி சாலையில் 3 பேர், ஒரே மோட்டார் சைக்கிளில் வேகமாக செல்வதை பார்த்த, சாதாரண உடையில் இருந்த போக்குவரத்து ஊர்காவல்படை வீரர் ஜெயசுஜன் மற்றும் காவலர் சுகன்ராஜ் சூகியோர் மோட்டார் சைக்களில் துரத்தி சென்று, ரவுடி கும்பல் மீது பைக்கை மோதி நிறுத்தினர்.இதில் நிலை குலைந்த கும்பல், காவலர்கள் வைத்திருந்த வாக்கி டாக்கி சத்தம் கேட்டு, சையதுகானை கொலை செய்யாமல் தப்பி ஓடியது. கொலைவெறி கும்பலிடம் இருந்து வாலிபரை காப்பாற்றிய ஊர்காவல்படை வீரர் மற்றும் காவலரை இன்ஸ்பெக்டர் ஜெயராமன், சக காவலர்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE