பெருங்குடி : மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு வரலாற்றுத்துறை மாற்றுத்திறனாளி மாணவர் கே.முத்துப்பாண்டி.இவர் கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் விளையாட்டு சங்கம் சார்பில் நடந்த மாநில மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது சீனியர் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றார்.பார்வையற்றோருக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கம், 100 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலம் பதக்கம் வென்றார். அவரை கல்லுாரி முதல்வர் கண்ணன், துணை முதல்வர் கிருஷ்ணன், வரலாற்றுத்துறை தலைவர் ரவிச்சந்திரன், உடற்கல்வி இயக்குனர் யுவராஜ் பாராட்டினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE