வாசகர் வாட்ஸ் அப் புகார்

Added : பிப் 24, 2021
Share
Advertisement
*கால்வாயில் குப்பை குவியல் மதுரை எஸ்.ஆலங்குளம் கண்மாய்க்கு தண்ணீர் வரும் கால்வாயில் குப்பை குவிந்து முட்புதர் மண்டியுள்ளது. இதை அகற்றி சிமென்ட் கால்வாய் கட்டி நீர் போக்குவரத்திற்கு வழி ஏற்படுத்தி தர பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்வருவார்களா. - பால்ராஜ், தாய்மூகாம்பிகை நகர். ///* குப்பை தொட்டி இல்லை மதுரை பழைய நத்தம் ரோடு வள்ளுவர் காலனி வாசுகி நகரில் குப்பை தொட்டி

*கால்வாயில் குப்பை குவியல்

மதுரை எஸ்.ஆலங்குளம் கண்மாய்க்கு தண்ணீர் வரும் கால்வாயில் குப்பை குவிந்து முட்புதர் மண்டியுள்ளது. இதை அகற்றி சிமென்ட் கால்வாய் கட்டி நீர் போக்குவரத்திற்கு வழி ஏற்படுத்தி தர பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்வருவார்களா. - பால்ராஜ், தாய்மூகாம்பிகை நகர். ///

* குப்பை தொட்டி இல்லை

மதுரை பழைய நத்தம் ரோடு வள்ளுவர் காலனி வாசுகி நகரில் குப்பை தொட்டி இல்லாததால் பல கி.மீ., துாரம் சென்று தான் குப்பை கொட்ட வேண்டியுள்ளது. துப்புரவு பணியாளர்கள் சரிவர வருவதுமில்லை. குப்பை தொட்டி வைக்க வேண்டுகிறேன். - உதயா, வாசுகி நகர். ///

* டெங்கு பரவும் அபாயம்

பழங்காநத்தம் நேதாஜி தெருவில் பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதனால் இங்கு டெங்கு பரவும் அபாயம் உள்ளது. கழிவுநீரை சுத்தம் செய்து இதுபோல் மீண்டும் வெளியேறாமல் இருக்க நடவடிக்கை தேவை. - கண்ணன், பழங்காநத்தம்.///

* கடிக்க பாயும் நாய்கள்

மதுரை காக்கா தோப்பு தெருவில் நாய் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநகராட்சியில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. வெளியே நடந்து சென்றாலே கடிக்க பாய்ந்து மிரட்டி வருகிறது. நாய்களை பிடிக்க கோரிக்கை விடுக்கிறேன். - ராஜா, காக்காதோப்பு.///

* குண்டும் குழியுமான ரோடு

ஜெய்ஹிந்திபுரம் 1வது மெயின் ரோடு குண்டும், குழியுமாக உள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக விபத்து அதிகம் நடக்கிறது. ரோட்டை சீரமைத்து விபத்தை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆவண செய்ய வேண்டும். - விக்னேஷ், சோலையழகுபுரம். ///

* உடைந்த மழைநீர் கால்வாய்

மதுரை குருவிக்காரன் சாலை 2வது குறுக்கு தெருவில் மழைநீர் கால்வாய் உடைந்து பல மாதங்களாகிறது. மழை காலங்களில் இதனால் மழைநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. கால்வாயை சீரமைத்து தண்ணீர் செல்ல வழித்தடம் ஏற்படுத்த வேண்டும். - பாலசுப்பிரமணியன், குருவிக்காரன் சாலை. ///

* தெருவில் பள்ளமான ரோடு

கூடல்நகர் அசோக் நகரில் உள்ள மூன்று தெருக்களில் ஒரு தெரு ரோடு மட்டும் பள்ளமாக உள்ளது. இதனால் மழை காலங்களில் தண்ணீர் தேங்குகிறது. தற்போது பாதாள சாக்கடை பணி துவங்கிய நிலையில் ரோட்டையும் உயர்த்த வேண்டும். - சீனிவாசன், அசோக்நகர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X