கடலுார் : மாத உதவித்தொகை ரூ. 3 ஆயிரமாக உயர்த்தி வழங்கக் கோரி, சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 90 பேர் கைது செய்யப்பட்டனர்.
40 சதவீதம் உடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 3 ஆயிரம் மாத உதவித்தொகை வழங்க வேண்டும்.நுாறுநாள் வேலை திட்டத்தில் 4 மணி நேரம் வேலை வழங்கி, முழு ஊதியம் வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்ப அட்டைகளை முன்னுரிமை (பி.எச்.எச்) அட்டைகளாக அறிவிக்க வேண்டும்.ஒரு கண்பார்வை இழந்த வர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் தழுவிய அளவில் அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டத்தை, அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கக்தினர் அறிவித்தனர்.
அதன்படி, சங்க கடலுார் மாவட்ட செயலர் ஆளவந்தார், பொருளாளர் நடேசன், முன்னாள் மாவட்ட செயலாளர் அமர்நாத் தலைமையில், கடலுார் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் குடியேரும் போராட்டம் நடத்த வந்தனர்.போலீசார் தடுத்து நிறுத்தியதால், மறியலில் ஈடுபட்டனர். அதைடுத்து, டி.எஸ்.பி., சாந்தி, இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார், மறியலில் ஈடுபட்ட 50 பெண்கள் உட்பட 90 பேரை கைது செய்தனர்.தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் புதுவாழ்வு நலச்சகத்தினர் மாவட்ட தலைவர் சண்முகம் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் ஆர்.டி.ஓ., அலுவலகம் வந்தனர். வீடு இல்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என, கோரிக்கை வைத்தனர். அவர்களிடம் மனுவை பெற்ற ஆர்.டி.ஓ., ஜெகதீஸ்வரன், நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE