மதுரை : மதுரை வைகை தென்கரையில் ரூ.52.36 கோடியில் மத்தியசாலை நிதி திட்டத்தில் தெப்பக்குளம் முதல் விரகனுார் சுற்றுச்சாலை வரை அமைக்கப்பட்ட நான்கு வழிச்சாலையை முதல்வர் பழனிசாமி சென்னையில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் திறந்தார்.
நகரில் நெரிசலை தவிர்க்க 2.2 கி.மீ., துாரத்திற்கு அமைக்கப்பட்ட இச்சாலையை கலெக்டர் அன்பழகன் பார்வையிட்டார். விபத்துக்கள் மற்றும் நகரில் பயணகால விரையத்தை தவிர்க்க இச்சாலை உதவும் என கலெக்டர் தெரிவித்தார்.தேசிய நெடுஞ்சாலை கண்காணிப்பு பொறியாளர் மாரிமுத்துராஜன், கோட்ட பொறியாளர் சேதுராஜன், உதவி கோட்ட பொறியாளர் சொக்கலிங்கம், உதவி பொறியாளர்கள் ஜெகநாதன், சண்முகநாதன், காவிய மீனா, மாதவன், ராஜபாண்டி, பி.ஆர்.ஓ., நவீன், உதவி அலுவலர் வினோத் உடன் சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE