அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

Added : பிப் 24, 2021
Share
Advertisement
சிதம்பரம் : கடலுார் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் அலோசனை கூட்டம், சிதம்பரத்தில் நடந்தது.அவைத் தலைவர் குமார் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் முருகுமாறன் எம்.எல்.ஏ., வரவேற்றார். கொள்கை பரப்பு துணை செயலாளர் இளங்கோவன், முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், கலைமணி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., பங்கேற்று பேசினார்.கூட்டத்தில், முன்னாள்

சிதம்பரம் : கடலுார் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் அலோசனை கூட்டம், சிதம்பரத்தில் நடந்தது.அவைத் தலைவர் குமார் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் முருகுமாறன் எம்.எல்.ஏ., வரவேற்றார்.

கொள்கை பரப்பு துணை செயலாளர் இளங்கோவன், முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், கலைமணி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., பங்கேற்று பேசினார்.கூட்டத்தில், முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்த நாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி, சிறப்பாக கொண்டாடுவது; விவசாயக் கடன் தள்ளபடி செய்து, விவசாயத்திற்கு மும்முனை மின்சாரம் வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

நிகழ்ச்சியில் நிர்வாகிகள் தேன்மொழி, ஜானகிராமன், சண்முகம், குணசேகரன், நவநீத கிருஷ்ணன், வீராசாமி, மணிகண்டன், செந்தில்குமார், ஒன்றிய செயலாளர்கள் ராசாங்கம், சுந்தரமூர்த்தி, பாலகிருஷ்ணன், வாசு முருகையன், சிவக்குமார், கலியமூர்த்தி, ஜோதிபிரகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.நகர செயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X