துாக்கிட்டு பெண் தற்கொலை
கள்ளிக்குடி: செங்கப்படை வீரணன் மனைவி புஷ்பராணி 42, கப்பலுார் தொழிற்பேட்டையில் வேலை செய்தார். வயிற்று வலியால் அவதிப்பட்டவர் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கள்ளிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
வரதட்சணை கேட்டு மிரட்டல் கணவர் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு
உசிலம்பட்டி: முத்தியம்பட்டி வனிதாவிற்கும் கம்பம் சுருளிபட்டி வைரவனுக்கும் 2104ல் திருணம் நடந்தது. குடும்பத்தகராறில் உறவினர்களுடன் சேர்ந்து வனிதாவை வைரவன் தாக்கினார். தந்தை பெயரில் உள்ள வீட்டை எழுதி வாங்கி வராவிட்டால் கொலை செய்வதாகவும் மிரட்டினார். திருமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் வனிதா வழக்கு தொடுத்தார். கோர்ட் உத்தரவின்படி வைரவன், முருகன், அழகுத்தாய், பொன்ராமர், முத்துப்பாண்டி, சத்தியா, இலக்கியா, ரஞ்சிதம், பிரியா உட்பட 9 பேர் மீது வழக்கு பதிந்து மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர்.
ஆடு திருடர்கள் சிக்கினர்
மேலுார்: வெள்ளரிப்பட்டியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஆட்டோவில் வந்த இருவரை விசாரித்தனர். ஒய்.புதுப்பட்டி அருண்குமார் 21, திருவாதவூர் அருண்குமார் 20, என்பதும், ஆடுகளை திருடி செல்வதும் தெரிந்தது. அவர்களை கைது செய்து 2 ஆடுகள் மற்றும் ஆட்டோவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE