பொது செய்தி

தமிழ்நாடு

மணிமுக்தாற்றில் சீரமைப்பு பணி

Added : பிப் 24, 2021
Share
Advertisement
விருத்தாசலம் : விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமகத்திற்கு, மணிமுக்தாற்றில் தண்ணீரை அப்புறப்படுத்தி சீரமைக்கும் பணியில், என்.எல்.சி., ராட்சத இயந்திரங்கள் ஈடுபட்டுள்ளன. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில், மாசிமக பிரம்மோற்சவ பத்தாம் நாளன்று, மணிமுக்தாற்றில் திதி கொடுப்பது ஐதீகம். அன்று, பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக் கணக்கானோர் கூடுவதால், அனைத்து துறை

விருத்தாசலம் : விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமகத்திற்கு, மணிமுக்தாற்றில் தண்ணீரை அப்புறப்படுத்தி சீரமைக்கும் பணியில், என்.எல்.சி., ராட்சத இயந்திரங்கள் ஈடுபட்டுள்ளன.

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில், மாசிமக பிரம்மோற்சவ பத்தாம் நாளன்று, மணிமுக்தாற்றில் திதி கொடுப்பது ஐதீகம். அன்று, பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக் கணக்கானோர் கூடுவதால், அனைத்து துறை அதிகாரிகள் இணைந்து, மணிமுக்தாறு, கோவில் வளாகம் பகுதிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்படும்.இந்தாண்டு திருவிழா துவங்கி ஒரு வாரமான நிலையில், எந்தவித பணிகளும் துவங்கவில்லை. இதனைச் சுட்டிக்காட்டி, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.

அதிகாரிகள் கண்டுகொள்ளதாதால், ஆத்திரமடைந்த பொது மக்கள், பக்தர்கள் இணைந்து, சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.அவர்களை சமாதானம் செய்த போலீசார், உத்தரவாதம் கொடுக்க முடியாமல் திணறினர். தகவலறிந்த தாசில்தார் சிவக்குமார், கலெக்டரிடம் தெரிவித்து, என்.எல்.சி., நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.அதன்படி, முதன்மை மேலாளர் சந்திரமவுலி, போர்மென் இளங்கோவன், ஆபரேட்டர் காமராஜ் அடங்கிய குழுவினர், நேற்று மாலை மணிமுக்தாற்றில் தண்ணீரை அகற்றி, சீரமைக்கும் பணியில் களமிறங்கினர்.

இதற்காக என்.எல்.சி., சுரங்கத்தில் தண்ணீரை இறைக்கப் பயன்படும் ராட்சத மிதவை இயந்திரம் மூலம் தண்ணீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று மாலைக்குள் தண்ணீரை அகற்றி, சீரமைக்கப்படும் என என்.எல்.சி., அதிகாரிகள் தெரிவித்தனர். உள்ளூர் அதிகாரிகள் கைவிட்ட நிலையில், என்.எல்.சி., நிர்வாகம் கைகொடுத்ததால், பக்தர்கள் நிம்மதியடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X