திருத்தணி : திருத்தணி நகராட்சியில், தானியங்கி ரயில்வே கேட்டில், வாகனங்கள் கடப்பதற்கு அமைத்த சாலை, பழுதடைந்ததால், ஓட்டுனர்கள் கடும் சிரமப்படுகின்றனர்.
திருத்தணி கந்தசாமி தெருவில், இரண்டாவது ரயில்வே தானியங்கி கேட் அமைக்கப் பட்டுள்ளது. இந்த கேட் வழியாக, வாகனங்கள் கடந்து செல்வதற்கு, 'சிலாப்' கற்களால் சாலை அமைக்கப்பட்டது.இந்த கற்கள் பழுதடைந்துள்ளதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விழுந்து அவதிப்படுகின்றனர்.இதுதவிர, ரயில்வே கேட் பாதையில், நடந்து செல்லும் மக்களும், கற்கள் மேடு, பள்ளத்தில் உள்ளதால், அடிக்கடி விழுந்து காயத்துடன் செல்கின்றனர். சில நேரங்களில், ரயில்வே கேட்டை வாகனங்கள் கடக்கும் போது, அங்குள்ள பள்ளத்தில் சிக்கிக் கொள்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
தானியங்கி ரயில்வே கேட் சாலையை, சீரமைக்க வேண்டும் என, பலமுறை, ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் பலனில்லை.எனவே, வாகன ஓட்டிகள் மற்றும் மக்கள் நலன் கருதி, ரயில்வே கேட் பாதையை சீரமைக்கவேண்டும் என, எதிர்பார்க்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE