ஆர்.கே.பேட்டை : ஏரிக்கரை மீதான நெடுஞ்சாலையில், விபத்துகளை தடுக்கும் விதமாக, சாலையோரத்தில், உலோக தடுப்புகளை அமைக்கும் பணி, நடந்து வருகிறது.
ஆர்.கே.பேட்டையில் இருந்து, அத்திமாஞ்சேரிபேட்டை செல்லும் நெடுஞ்சாலையில், ராஜா நகரம் கிராமத்தின் வடக்கு பகுதியில், ஏரிக்கரை மீதான சாலையில், வாகனங்கள் பயணிக்கின்றன. பல்வேறு வளைவுகளுடன் கூடிய இந்த சாலையில், விபத்துகள் நடந்து வருகின்றன. 15 ஆண்டுகளுக்கு முன், ஏரிக்கரை சாலையின் வளைவுகள் நேராக அமைக்கப் பட்டு, சாலை சீரமைக்கப்பட்டது.கடந்த 2008ல், இந்த, கரை மீது பயணித்த லாரி ஒன்று, ஏரிக்குள் கவிழ்ந்து விபத்தில் சிக்கியதும் குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், ஏரிக்கரை மீது, சாலையோர உலோக தடுப்புகள் அமைக்கும் பணி, தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நெடுஞ்சாலை துறையினர், இதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஓரிரு நாட்களில், கரையோர சாலை முழுதும், தடுப்பு அமைக்கப்பட்டு விடும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE