ஜே.சி.பி., உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஜே.சி.பி., உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

Added : பிப் 24, 2021
Share
ஊத்துக்கோட்டை : ஜே.சி.பி., உதிரி பாகங்கள், டீசல் விலையேற்றம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட, ஜே.சி.பி., உரிமையாளர்கள் சார்பில், இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. தமிழ்நாடு மண் அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில், இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.இது குறித்த கூட்டம், ஊத்துக்கோட்டையில், மாநில துணை தலைவர் பரந்தாமன் தலைமையில் நடந்தது. மாநில

ஊத்துக்கோட்டை : ஜே.சி.பி., உதிரி பாகங்கள், டீசல் விலையேற்றம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட, ஜே.சி.பி., உரிமையாளர்கள் சார்பில், இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.

தமிழ்நாடு மண் அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில், இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.இது குறித்த கூட்டம், ஊத்துக்கோட்டையில், மாநில துணை தலைவர் பரந்தாமன் தலைமையில் நடந்தது. மாநில தலைவர் கத்திப்பாரா விவேக் பங்கேற்றார். இதில், இனி வரும் காலங்களில், ஜே.சி.பி., பயன்பாட்டிற்கு, தற்போது, ஒரு மணி நேரத்திற்கு, 800 ரூபாய் பெறப்படுகிறது.விலை ஏற்றம் காரணமாக, இனி, ஒரு மணி நேரத்திற்கு, 1,000 ரூபாய் பெறுவது என்பதை வலியுறுத்தினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X