சென்னை : சென்னையின், 44வது புத்தக கண்காட்சியை, துணை முதல்வர் பன்னீர்செல்வம் இன்று துவக்கி வைக்கிறார்.
சென்னையில், ஒவ்வோர் ஆண்டும் ஜனவரியில், பிரமாண்டமான புத்தக கண்காட்சி நடக்கும். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் நடக்கும் இந்த கண்காட்சிக்கு, தென்னிந்தியாவில் மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும், வாசகர்கள் புத்தகங்களை வாங்க வருவர். தமிழகத்தின் மிகப் பெரிய புத்தகக் கண்காட்சி என்பதால், இதில், 500க்கும் மேற்பட்ட பதிப்பகங்களின், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய தலைப்புகளில், புத்தகங்கள் விற்பனைக்கு வரும். இந்த ஆண்டின் புதிய வெளியீடுகள், அனைத்தும் கிடைக்கும் என்பதால், இது, அறிவுப்பசி நிறைந்தோரின் வேடந்தாங்கலாகவே அமையும்.
இந்த ஆண்டிற்கான புத்தக கண்காட்சியை, இன்று காலை, 9:00 மணிக்கு, துணை முதல்வர் பன்னீர்செல்வம், நந்தனம், ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் துவக்கி வைக்கிறார். மார்ச், 9 வரை, தினமும் காலை, 11:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை கண்காட்சி நடக்கிறது. கண்காட்சி ஏற்பாடுகளை, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமான 'பபாசி'யின் தலைவர் ஆர்.எஸ்.சண்முகம், செயலர் எஸ்.முருகன், பொருளாளர் ஆ.கோமதிநாயகம் மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
இன்று மாலை, 6:00 மணிக்கு, நுாற்றாண்டு கண்ட பதிப்பாளர்கள் மற்றும் பதிப்பகத்திற்கு, சென்னை, போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், விருதுகளை வழங்கி வாழ்த்துகிறார். செய்தி உண்டுபடம்: முகேஷ்சென்னையில் 44வது புத்தக கண்காட்சி துவக்கப்படவுள்ள ஸ்டால்களில் புத்தகங்களை சரிசெய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள். இடம்: ஒய்.எம்.சி.யே. மைதானம், நந்தனம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE