கடலுார் : கடலுாரில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில், 334 மனுக்கள் பொதுமக்கள் சார்பில் அளிக்கப்பட்டது.
கடலுார் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் அனைத்துத்துறை அலுவலர்களுடன் கலெக்டர் சந்திரசேகர சகாமுரி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை, பட்டா, நிலஅளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் என, மொத்தம் 334 மனுக்கள் வரப்பெற்றன. மனுக்களை தீர ஆராய்ந்து தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆதி திராவிடர் நலத்துறை மூலம் இலவச எம்பிராய்டரி தையல் இயந்திரம் 5 பயனாளிகளுக்கு தலா ரூ.10,900 மதிப்பிலும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் இலவச தையல் இயந்திரம் 11 பயனாளிகளுக்கு தலா ரூ.3,573 வீதமும், நல திட்டங்கள் உடனடியாக வழங்கப்பட்டன. கூட்டத்தில் டி.ஆர்.ஓ., (பொ) கார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE