திருநகர் : மதுரை பெட்கிராட் நிறுவனம், அகமதாபாத் இ.டி.ஐ.ஐ., சார்பில் திருநகர் அமைதிச்சோலைநகரில் 50 பெண்களுக்கு முருங்கை பவுடர், மசாலா பொருட்கள், துரித உணவுப் பொடிகள் தயாரிக்கும் பயிற்சி முகாம் துவங்கியது.
ஒரு மாதம் நடக்கும் இப்பயிற்சிக்கு பெட்கிராட் நிர்வாக இயக்குனர் சுப்புராம் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் அங்குசாமி வரவேற்றார். தொழில் மைய பொதுமேலாளர் ராமலிங்கம் துவக்கினார். இ.டி.ஐ.ஐ., திட்ட அலுவலர் திருப்பதி, பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மேலாளர்கள் தங்கமலர், சாந்தி, சுயதொழில் முனைவோர் பிச்சைமணி, திட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணவேணி, களப்பணியாளர்கள் புஷ்பகலை, துளசிராமன் பேசினர். மகளிர் சுய உதவிக்குழு நிர்வாகி பிரியா நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE