பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டையில், உயர் கோபுர மின் விளக்கை, பாண்டியன் எம்.எல்.ஏ., இயக்கி வைத்தார்.
பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் மீன்பிடி இறங்கு தளத்தில், மீனவர்கள் கோரிக்கையை அடுத்து, பாண்டியன் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 15 லட்சம் ரூபாய் மதிப்பில், 6 இடங்களில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டது.அதற்கான துவக்க விழா பரங்கிப்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் சீனிவாசன் தலைமையில் நடந்தது. முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், ஒன்றிய செயலர் ராசாங்கம் முன்னிலை வகித்தனர்.மீனவரணி சிவக்குமார் வரவேற்றார்.
உயர் கோபுர மின் விளக்கை, பாண்டியன் எம்.எல்.ஏ., இயக்கி வைத்தார்.நிகழ்வில், மாவட்ட மீனவரணி செயலர் வீராசாமி, ஜெ., பேரவை சந்தர் ராமஜெயம், கூட்டுறவு வங்கி தலைவர் வசந்த், கிராம தலைவர் குட்டியாண்டி, நிர்வாகிகள் ஜெய்சங்கர், ரயில்வே பாஸ்கர், தமிழரசன், கல்யாணசுந்தரம், நாகராஜ், தமிழ்மணி, சிவராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE