சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வழிப்பறி வாலிபருக்கு 'குண்டாஸ்'

Added : பிப் 24, 2021
Share
Advertisement
விருத்தாசலம் : வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டவர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். விருத்தாசலம் அடுத்த கோபாலபுரத்தைச் சேர்ந்தவர் பரமசிவம் மனைவி வசந்தி. இவர் கடந்த ஜன., 12ம் தேதி தனது மகனுடன், விருத்தாசலம் பாலக்கரையில் நடந்து சென்றார். அப்போது பைக்கில் வந்த மர்மநபர்கள் இருவர், அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவர் அணிந்திருந்த 3 சவரன் செயினை பறித்துச்

விருத்தாசலம் : வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டவர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

விருத்தாசலம் அடுத்த கோபாலபுரத்தைச் சேர்ந்தவர் பரமசிவம் மனைவி வசந்தி. இவர் கடந்த ஜன., 12ம் தேதி தனது மகனுடன், விருத்தாசலம் பாலக்கரையில் நடந்து சென்றார். அப்போது பைக்கில் வந்த மர்மநபர்கள் இருவர், அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவர் அணிந்திருந்த 3 சவரன் செயினை பறித்துச் சென்றனர்.இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, வடலுார் அடுத்த கருங்குழி காலனியைச் சேர்ந்த சம்பத்குமார்,29; தமிழ்ச்செல்வன், 32, ஆகியோரை கைது செய்தனர்.சம்பத்குமார் மீது 6 குற்ற வழக்குகள் உள்ளன.

இவரின் குற்ற நடவடிக்கைளை தடுக்கும் பொருட்டு, விருத்தாசலம் டி.எஸ்.பி., மோகன், எஸ்.பி., ஸ்ரீ அபிநவ் ஆகியோர் பரிந்துரையின் பேரில், சம்பத்குமாரை ஓராண்டு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சந்திரசேகரசகாமுரி உத்தரவிட்டார்.இதற்கான உத்தரவு நகலை சிறையில் உள்ள சம்பத்குமாரிடம் போலீசார் வழங்கி கையெழுத்து பெற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X