திருமங்கலம் : திருமங்கலத்தில் ஊராட்சி ஒன்றிய குழுக்கூட்டம் தலைவர் லதா தலைமையில் நடந்தது.துணை தலைவர் வளர்மதி, பி.டி.ஓ., உதயகுமார், வில்சன் கலந்து கொண்டனர். கவுன்சிலர் மின்னல்கொடி பேசுகையில்,''தங்கள் பகுதியில் வளர்ச்சித்திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்கப்படவில்லை. நிதி ஒதுக்கினால் பணிகள் தொய்வின்றி நடக்கும்,'' என்றார்.பி.டி.ஓ., பேசுகையில், ''இம்மாதம் முதல் காசோலைகள் முற்றிலும் தடை செய்யப்பட்டு ஆன்லைன் மூலம் மட்டுமே பணப்பரிமாற்றம் செய்யப்படும். கவுன்சிலர்களுக்கு இந்த மாதம் கூட்ட படிப்பணம் வழங்கப்படவில்லை,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE