சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ராமநத்தம் பகுதியில் தொடர் திருட்டு: போலீஸ் திணறல்

Added : பிப் 24, 2021
Share
Advertisement
திட்டக்குடி : ராமநத்தம் பகுதி கிராமங்களில் கடந்த ஐந்து மாதங்களில் நடந்த தொடர் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். ராமநத்தம் எல்லைக்குட்பட்ட புலிகரம்பலூர் கிராமத்தில் கடந்த ஆண்டு, அக்டோபர் 1ம் தேதி நிவேதிதா என்பவரது வீட்டில் 8 சவரன் நகை, ஒரு லட்சம் ரொக்கம்; 19ம் தேதி ஆலம்பாடி கிராமத்தில் மணி, ராம்குமார் ஆகியோர் வீடுகளில் 110 சவரன் நகை, ஏழு லட்சம்

திட்டக்குடி : ராமநத்தம் பகுதி கிராமங்களில் கடந்த ஐந்து மாதங்களில் நடந்த தொடர் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

ராமநத்தம் எல்லைக்குட்பட்ட புலிகரம்பலூர் கிராமத்தில் கடந்த ஆண்டு, அக்டோபர் 1ம் தேதி நிவேதிதா என்பவரது வீட்டில் 8 சவரன் நகை, ஒரு லட்சம் ரொக்கம்; 19ம் தேதி ஆலம்பாடி கிராமத்தில் மணி, ராம்குமார் ஆகியோர் வீடுகளில் 110 சவரன் நகை, ஏழு லட்சம் ரொக்கம் திருடுபோனது.நவம்பர் 21ம் தேதி ராமநத்தம் அரியாயி, 75, என்பவரிடம் மூன்று சவரன் நகையை மர்மநபர் பறித்துச்சென்றார்.

டிசம்பர் 18ம் தேதி கண்டமத்தான் கிராமத்தில் நான்கு வீடுகளில் இரண்டு சவரன் நகை, 30 ஆயிரம் ரொக்கம்; 28ம் தேதி ஆலத்தூர் முருகேசன் வீட்டில் நான்கு சவரன் நகை, ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரொக்கம் திருடுபோனது.ஜனவரி 24ம் தேதி ராமநத்தத்தில் ஜாபர் மொபைல் கடையில் திருட்டு, 25ம் தேதி சுரேஷ் செராமிக்ஸ் கடையில் 90 ஆயிரம் ரூபாய் ரொக்கம், லேப்டாப் உட்பட ஒன்றரை லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு போனது.

பிப்., 4ம் தேதி கீழக்கல்பூண்டி அரசு டாஸ்மாக் கடையில் 40 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு, 6ம் தேதி அதிகாலை கொ.குடிகாட்டில் அங்கம்மாளிடம் மூன்று சவரன் செயின் பறிப்பு, லட்சுமணாபுரத்தில் செல்வராணி வீட்டில் 25 ஆயிரம் திருடு போனது. இச்சம்பவங்களில் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X