சித்து மீதான வழக்கு மைசூருக்கு மாற்றம்

Added : பிப் 24, 2021
Share
Advertisement
மைசூரு : கொடவர்களின் மனதை புண்படுத்தும் வகையில் பேசியது தொடர்பாக, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா மீது பதிவான வழக்கு, மடிகேரி ஊரக காவல் நிலையத்திலிருந்து, மைசூரின் அசோகபுரம் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. மைசூரு, அரவிந்த நகர், காலபைரவேஸ்வரா திருமண மண்டபத்தில், 2020 டிச., 18ல் நடந்த நிகழ்ச்சியில், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பங்கேற்றார். அப்போது

மைசூரு : கொடவர்களின் மனதை புண்படுத்தும் வகையில் பேசியது தொடர்பாக, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா மீது பதிவான வழக்கு, மடிகேரி ஊரக காவல் நிலையத்திலிருந்து, மைசூரின் அசோகபுரம் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

மைசூரு, அரவிந்த நகர், காலபைரவேஸ்வரா திருமண மண்டபத்தில், 2020 டிச., 18ல் நடந்த நிகழ்ச்சியில், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பங்கேற்றார். அப்போது பேசிய அவர், 'கொடவர்களும் கூட, மாட்டிறைச்சி தின்கின்றனர்' என, கூறினார்.சித்தராமையா உள் நோக்கத்துடன், இது போன்று பேசி, கொடவர் சமுதாயத்தினரின் மன உணர்வை புண்படுத்தியதாக, முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சாந்தயன்டா ரவி குஷாலப்பா என்பவர், மடிகேரி ஊரக காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார்.

இந்த சம்பவம், மைசூரு நகரின், அசோகபுரம் காவல் நிலைய எல்லைக்குள் நடந்திருப்பதால், சித்தராமையா மீதான வழக்கு, மடிகேரி ஊரக காவல் நிலையத்திலிருந்து, மைசூரின் அசோகபுரம் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X