மைசூரு : கொடவர்களின் மனதை புண்படுத்தும் வகையில் பேசியது தொடர்பாக, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா மீது பதிவான வழக்கு, மடிகேரி ஊரக காவல் நிலையத்திலிருந்து, மைசூரின் அசோகபுரம் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
மைசூரு, அரவிந்த நகர், காலபைரவேஸ்வரா திருமண மண்டபத்தில், 2020 டிச., 18ல் நடந்த நிகழ்ச்சியில், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பங்கேற்றார். அப்போது பேசிய அவர், 'கொடவர்களும் கூட, மாட்டிறைச்சி தின்கின்றனர்' என, கூறினார்.சித்தராமையா உள் நோக்கத்துடன், இது போன்று பேசி, கொடவர் சமுதாயத்தினரின் மன உணர்வை புண்படுத்தியதாக, முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சாந்தயன்டா ரவி குஷாலப்பா என்பவர், மடிகேரி ஊரக காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார்.
இந்த சம்பவம், மைசூரு நகரின், அசோகபுரம் காவல் நிலைய எல்லைக்குள் நடந்திருப்பதால், சித்தராமையா மீதான வழக்கு, மடிகேரி ஊரக காவல் நிலையத்திலிருந்து, மைசூரின் அசோகபுரம் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE