பெங்களூரு : இரவு நேரத்தில் சாலைகளில் பயணிப்போர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உதவி கேட்பது போன்று நடித்து, பணம் பறிக்கும் கும்பலால், மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு, பனசங்கரியில் வசிக்கும் நபர், பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது காலில் காயமடைந்து, 'பேண்டேஜ்' கட்டுடன், சாலையோரத்தில் நின்றிருந்த நபர் உதவி கேட்டார். இதை கவனித்த பைக் பயணி, பைக்கை நிறுத்தி, 'என்ன ஆனது' என கேட்டார். அப்போது, நான்கைந்து பேர், அவரை சுற்றி வளைத்து, கடத்தி சென்றனர்.மாண்டியா மாவட்டம், மலவள்ளி வரை சுற்றி, பைக் நபரின் பெற்றோருக்கு, போன் செய்ய வைத்து பணம் கேட்க வைத்தனர். அவர்களும் உடனடியாக, 15 ஆயிரம் ரூபாயை, வங்கிக்கணக்கில் செலுத்தியுள்ளனர்.பணத்தை பறித்துக்கொண்ட அக்கும்பல், அந்நபரை விட்டு பைக்குடன் தப்பியோடி உள்ளது.
மலவள்ளியிலிருந்து, பனசங்கரிக்கு வந்த அவர், போலீசாரிடம் புகார் செய்தார். விசாரணை நடத்திய போலீசார், திப்பு சுல்தான், ஜாபர், விஷால், தீபக் நவீன் ஆகியோரை கைது செய்தனர். இரவு நேரத்தில் கார், பைக்கில் செல்வோரிடம், உதவி கேட்பது போன்று நடித்து, கொள்ளையடிப்பதை வழக்கமாக வைத்துள்ளது விசாரணையில் தெரிய வந்தது.எனவே, இரவு நேரத்தில், பைக் அல்லது காரில் செல்வோர், வழியில் யாராவது உதவி கேட்டால், பொருட்படுத்த வேண்டாம் என, போலீசார் எச்சரித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE